×

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகல்..!!

டெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் 34 பேர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட 195 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப் படவில்லை.

இந்நிலையில், ஹரியாணா ஹிசார் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸில் இணைந்தார். ஏற்கனவே பாஜக எம்.பி கட்சியிலிருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று ராஜஸ்தான் பாஜக எம்.பி. ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். பாஜகவில் இருந்து விலகிய எம்.பி.ராகுல் கஸ்வான், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகல்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,BJP ,Delhi ,Lok Sabha ,Modi ,Speaker ,
× RELATED பாஜக நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர் மகன் கைது..!!